Thursday, January 7, 2010

வீடு கட்டும் மனை எப்படி இருந்தால் நல்லது?

        நாம் கட்டவிருக்கும் புது வீட்டுக்கு எதிரே நீர் தேங்கிகியிருககும் குளமோ குட்டைகளோ குப்பை மேடுகளோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அதிலிருந்து வரும் தீய கதிர் வீச்சுக்கள் வீட்டில் குடியிருப்பவர்களை பாதிக்கும்.மேலும் வீட்டுக்குள் நுழையும் காற்றும் சுத்தமாக இருக்காது. நாம் வாங்கிய வீட்டுமனைக்கு அடியில் எலும்புக் கூடோ மண்டை ஓடோ இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர் களுக்கு தொல்லைகள் வந்து சேரும்.  வீடு கட்டும் மனை எப்படி
     முதலில் நல்ல நேரம் பார்க்க வேண்டும். அந்த நல்ல நேரத்தில் நமது முன்னோர்களையும் நமது இஷ்ட தெய்வத்தையும் வணங்க வேண்டும். அப்புறம் முதியவாகள் குழந்தைகள் மங்கலப் பெண்களுக்கு தானதர்மம் செய்துவிட்டு நாம வீடுகட்ட போகும் மனையின் மையப் பகுதில் சின்ன குழி தோண்ட வேண்டும். அதில் கொஞ்சம் மண்ணை எடுக்க  வேண்டும்.  அந்த மண்ணில் என்ன என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும்  புழு பூரான் இருந்தால் ஆரம்பித்த வேலையை எளிதில் முடிக்க முடியாமல் திணற வேண்டியதிருக்கும். அப்படி இல்லாமல் செங்கல் துண்டு கந்தல் துணி இருந்தால் அந்த மனையில் வீடு கட்டலாம். நல்ல முன்னேற்றம் ஏற்படும்

          அப்படியில்லாமல் நகம் முடி தேள் விறகு கரி அல்லது உமி  அந்த மண்ணில் இருந்தாலும் நல்லதில்லை. மண்ணில் தங்கம் வெள்ளி செம்பு போன்ற உலோகங்கள் காணப்பட்டாலும் ரெம்ப நல்லது. இரும்பு ஈயம் பித்தாளை இருந்தாலும் பரவாயில்லை. ஒருவேளை அதில் காசு பணம் இருந்தாலும் ரெம்ப நல்லதுதான். வீடு கட்டும் மனை எப்படி
          மண்ணில் தவளை ந்ணடு அரணை சிலந்தி இருந்தால் அதுவும் நன்மைதான். வீடு கட்டும் மனை எப்படி
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்