Monday, January 4, 2010

வாஸ்து சாஸ்திரமும் அதன் பழமையும்

     கட்டடம் கட்டிய நிலம் அல்லது கட்டடம் கட்டபோகிற நிலத்தை குறிக்கும் சொல்தான். "வாஸ்து" ஆகும்.  ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும் அதன் பலன்களையும்  விளக்கும் ஒரு
வேதமே வாஸ்துசாஸ்திரமாகும்

பண்டைய வாஸ்துசாஸ்திர நூல்கள்
1.அதர்வன வேதம்
2.வராஹமிஹிரரால் எழுதப்பட்ட பிருஹத் சம்ஹிதை
3. மயனால் எழுதப்பட்ட மயமதம்
4. மானசாரரால் எழுதப்பட்ட மானசாரம்
5. விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம்
முதலியன
வாஸ்துபுருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்
         வாஸ்துபுருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். கட்டிடம் கட்டுவதற்கான மனையில் கட்டிடத்தின் அமைப்பு நோக்கும் திசை மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்துபுருஷ மண்டலம் ஆகும்.  . இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு  பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்துபுருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் என்று சொ்ல்லப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்துநூல்கள் சொல்கின்றன

     வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகள். வடமேற்கு திசைக்கு வாயுவும் வடகிழக்கு திசைக்கு ஈசனும் தென்கிழக்கு திசைக்கு அக்னியும் தென்மேற்கு திசைக்கு பித்ருவும் அதிபதிகள்.

வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்